என்றென்றும் என் காதலர் இவர்தான்: த்ரிஷா பதிவு!

நேற்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். அதுபோல பிரபலங்களும் தங்களுடைய காதலர், கணவர், மனைவியோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அப்போது நடிகை த்ரிஷா தன்னுடைய காதலர் இவர்தான் என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வாரமாகவே கிஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே என்று விதவிதமாக கொண்டாடி மக்கள் மகிழ்ந்து வந்தனர். அதே நேரத்தில் நேற்றிலிருந்து சமூக வலைதள பக்கங்களில் காதலர்களின் புகைப்படங்கள் மற்றும் கணவன் மனைவியின் புகைப்படங்கள் குவிந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பலர் தங்களுடைய காதலை ஆறாக ஓட விடுகிறார்கள். அதே நேரத்தில் சிங்கிளாக இருப்பவர்கள் தங்களை தாங்களே காதலிப்பதாகவும் மோட்டிவேஷனல் போஸ்ட் போட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று இருக்கிறது.

அதில், “இந்த நாள் தான் நான் இஸியை தத்தெடுத்தேன். ஆனால் அவள் என்னை மீட்டெடுத்தாள். நன்றி லோகேஷ் பாலா. என் வாழ்க்கையில் எனக்கு வெளிச்சம் தேவைப்பட்டபோது எனக்கு அவளை கொடுத்ததற்கு நன்றி. என்றென்றும் என் காதலர் இவள் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

த்ரிஷா அவருடைய காதலரோடு புகைப்படம் வெளியிடுவார் என்று பார்த்தால் அவருடைய செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது குறித்தும் இணையத்தில் அதிகமானோர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.