திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ‘ ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய ரசிகர் ஒருவர் செய்த செயலுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதில் கொடுத்திருக்கிறார்.
ஆம், யாஷிகாவின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படத்தை தன்னுடைய மார்பில் பச்சைக்குத்தி, அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இதனைப்பார்த்த யாஷிகா ஆனந்த், எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை பார்த்தேன். அவ்வாறு செய்த போது எவ்வளவு வலித்திருக்கும். ஏன் இப்படி செய்கிறீர்கள். உங்களது அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள். அதுதான் எனக்கு சந்தோஷம்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கும் முன்பு யாஷிகா ஆனந்த்தின் புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் கையில் சூடம் ஏற்றி வழிபடுவது போன்று போஸ்ட் போட்டிருந்தார். அதையும் ஷேர் செய்த யாஷிகா அதற்கும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். அதில், “நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான். அன்பை மட்டும் பரப்புவோம். நமக்கெல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம்” என்று அறிவுரை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாஷிகா ஆனந்திடம் எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் X Ray கண்கள் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் கைவசம் இருக்கின்றன.