நடிகை சாக்ஷி அகர்வால் நவ்நீத்தை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். தனது ஆசை கணவருடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு இவரும் ஜோடியாக பேட்டி அளித்து வந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது இருவரும், ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் அட்லி, இயக்கத்தில் நடிகை நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். தற்போது, சாக்ஷியை பலத்திரைப்படத்தில் பார்க்க முடிகிறது. அண்மையில் வெளியான ஃபயர் திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் ஒரு நல்ல ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மக்களிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
அப்படி அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நவநீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நவநீத் சிறுவயதிலிருந்தே, சாக்ஷி அகர்வால் குடும்ப நண்பர். சாக்ஷியின் சிறுவயது நண்பரும் கூட.. ஒருகட்டத்தில், இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், பின்னர் பெற்றோரிடம் கூறி தற்போது திருமண உறவிலும் இணைந்துள்ளனர்.
அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சாக்ஷி அகர்வால், தன்னுடைய பர்சனல் வாழ்க்கை பற்றி பல விஷயத்தை பேசிய சாக்ஷி அகர்வால், நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும், தற்போது வரை வாழ்க்கையை துவங்கவில்லை. கல்யாணம் முடிந்த பிறகு நான் படத்தின் புரொமோஷனுக்காக தொடர்ந்து, அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம். எனவே எங்களால் திருமண வாழ்க்கையை இன்னும் தொடங்க முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், ஹனிமூன் எப்போது என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த, சாக்ஷி அகர்வால், காதலர் தினம் வருவதால் முதலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டு.. அதன் பிறகு வெளிநாடு செல்ல இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், சாக்ஷி அகர்வால், தன்னுடைய காதல் கணவருடன் மாலத்திவிற்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு விதவிதமான உடையில் கடலை ரசித்தபடி அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.