யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது: லாஸ்லியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் லாஸ்லியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில் இரவு 2 மணிக்கு போலீசாருடன் சண்டை போட்டது குறித்து கண்கலங்க பகிர்ந்து இருக்கிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா இப்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இலங்கையில் தொகுப்பாளினியாகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்த லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலத்தை கொடுத்தது. இதுவரைக்கும் விஜய் டிவியில் 8 சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் என்று பலரும் சொல்வார்கள். அந்த சீசனில் சாண்டி மாஸ்டர், கவின், தர்ஷன், லாஸ்லியா போன்ற பலர் கலந்து கொண்டனர். அவர்களுடைய காமெடி மற்றும் காதல் காட்சிகள் இப்போதும் இணையத்தில் வீடியோ கிளிப்ஸிகளாக வைரல் ஆகி வருகிறது. அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகிவிடுகிறது. அதுபோல மூன்றாவது சீசனில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதல் கன்டெண்ட் கொடுத்து நிகழ்ச்சிக்கு சுவாரசியம் ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தபோது லாஸ்லியாவை திட்டி இருந்தார். அதிலும் நீ இந்த நிகழ்ச்சிக்கு வந்தது காதலிக்க வா என்று அவர் பேசியது, அப்போது லாஸ்லியா அழுதது எல்லாம் அதிக அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு கவின் லாஸ்லியாவை விட்டு விலகி இருந்தார்.

பிறகு ஒரு சில நாட்களில் பணப்பெட்டி டாஸ்க் வந்தது அப்போது பெட்டியை எடுத்துக்கொண்டு கவின் வெளியே கிளம்பி விட்டார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு அவர்கள் காதல் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை என்ற நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் என்னுடைய அப்பாவின் இறப்பு நாங்கள் எதிர்பார்க்காதது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது நான் அப்பாவை பார்த்தேன். அதற்குப் பிறகு அவரை பிணமாக தான் பார்த்தேன். அவருடைய இறப்பு கன்னடாவில் நடந்துவிட்டது. அங்கிருந்து அப்பாவை சிங்களத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவும் சில நாட்கள் கழித்து போராடி தான் அப்பா உடல் சிங்களம் வந்தது.

அதுவும் இரவு நேரத்தில் வந்ததால் போலீஸ் ஸ்டேஷனில் இரவு உடலை தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியாது. அப்போது துணைக்கு யாரும் இல்லை. நான் தனி ஆளாக போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரிடம் சண்டை போட்டேன். இரவு 2 மணிக்கு நான் மட்டும் இருப்பதை பார்த்து போலீசார் தான் நீ இந்த நேரத்தில் தனியா இருக்க என்று பாவம் பார்த்து அனுப்பி வைத்தார்கள். அதற்குப் பிறகுதான் எங்களுடைய சொந்த ஊருக்கு கொண்டு போய் காரியம் எல்லாம் செய்து முடித்தோம். அந்த நேரத்தை எல்லாம் மறக்கவே முடியாது. அதுபோன்ற கஷ்டமான நேரம் யாருக்கும் வரக்கூடாது.

என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததும் அந்த நேரத்தில் தான். அப்பா இறக்கும்போது கூட ரொம்பவே யோசித்து இருப்பார். நான் இந்த குடும்பத்திற்கு இல்லை என்றால் இனி இந்த குடும்பம் என்ன ஆகும் என்று அவர் யோசித்து இருப்பார். அதனால் அவருடைய இடத்தில் நான் குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன் என்று லாஸ்லியா அழுது இருக்கிறார்.