ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி வாழ்க்கையை நான் கெடுத்தேனா?: திவ்யபாரதி!

கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பேச்சுலர் படத்தில் நடித்ததில் இருந்துதான் ஜி.வி. பிரகாஷ் குமார் சரியில்லை என்றும் மீண்டும் கிங்ஸ்டன் படத்திலும் அதே ஹீரோயினை ஜோடியாக்கியுள்ளார். இவங்க வாழ்க்கையை கெடுத்ததே திவ்யபாரதி தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் புகைந்து வருகின்றன. இந்நிலையில், முதல்முறையாக அதுகுறித்து நடிகை திவ்யபாரதியே வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு டார்லிங் படத்தை விட அதிக ரெஸ்பான்ஸை ரசிகர்கள் மத்தியில் கொடுத்த படம் என்றால் அது பேச்சுலர் படம் தான். அந்த படத்தின் டீசர் வெளியான போதே சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தது. அந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி. அந்த படத்திற்கு பிறகு மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக கேமியோ ரோல் போல நடித்த அவர், கிங்ஸ்டன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தெலுங்கில் கோட் எனும் படத்திலும் நடித்துள்ளார்.

4 வயது அன்வி குழந்தை இருக்கும் போது திடீரென அம்மா சைந்தவியும் அப்பா ஜி.வி. பிரகாஷ் குமாரும் ஒருவரையொருவர் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.ஆர். ரஹ்மானின் மருமகனா இப்படி விவாகரத்தை அறிவித்தார் என பலரும் பேசி முடிப்பதற்குள் ஏ.ஆர். ரஹ்மானே விவாகரத்தை அறிவித்ததும் ஜி.வி. பிரகாஷின் விவாகரத்து பற்றிய சர்ச்சைகள் அடங்கியிருந்தன.

இந்நிலையில் திவ்யபாரதி கூறுகையில், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் ஜி.வி. பிரகாஷ் சார் மற்றும் சைந்தவி மேம் இணைந்து கச்சேரிகளை நடத்துவதை பார்க்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் இணைந்து பாடிய “பிறை தேடும் இரவிலே” பாடல் எல்லாம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். இனிமேல் நம்மை யாரும் போட்டு அடிக்க மாட்டாங்க, டார்கெட் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனால், இப்போதான் அதிகமா அசிங்கப்படுத்துறாங்க. அவங்க ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி என்றும் அவங்க வாழ்க்கையையே நான் தான் கெடுத்து விட்டேன் என பெண்களே அதிகம் திட்டி வருகின்றனர். அதையெல்லாம் கேட்கும் போதும், படிக்கும் போதும் எந்தவொரு ரிப்ளையும் பண்ணாமல் கடந்து சென்று வருகிறேன் என திவ்யபாரதி வெளிப்படையாக பேசியுள்ளார்.