அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய வெப் தொடரில் பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் அஜய் ஞானமுத்து இயக்கும் வெப் தொடர் ஒன்றில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பமே ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த தேவா படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பயங்கரமான பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்தனர். 2024இல் இந்தி படங்கள் பெரும்பாலும் சொதப்பி வந்த நிலையில், பாலிவுட்டுக்கும் நல்ல வெற்றிப் படமாக தேவா இருந்தது. இந்நிலையில், தேவா படத்தில் ஷாகித் கபூருடன் இருக்கும் நெருக்கமான முத்தக் காட்சிகள் பெரும் சர்ச்சையை வெடித்தது. சென்சார் போர்டே திகைத்து போகும் அளவிற்கு ரொமான்ஸ் காட்சிகள் இருந்துள்ளன. பூஜா ஹெக்டே நடிகர் ஷாகித் கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்த சீனை ரசிகர்கள் தியேட்டரில் இருந்தே வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் தீயாக பரப்பினர். இந்த காட்சியை பார்க்கவே சிலர் தியேட்டருக்கு படையெடுத்தனர்.

டிமாண்டி படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறிமுகம் ஆனவர் அஜய் ஞானமுத்து. விக்ரமை வைத்து இயக்கிய கோப்ரா படம் தோல்வியடைந்தது. பின்னர், டிமாண்டி 2 படத்தின் மூலம் தோல்வி சரிவில் இருந்து மீண்டார். தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய வெப்தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதில், பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களின் மனதை கவர்ந்த இளம் நடிகை என்றாலும் பெரும் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது பூஜா ஹெக்டேவும் வெப் தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார். 2025 ஆண்டு அவருக்கு மிகப்பெரும் வெற்றியையும் சிறந்த ஆண்டாக அமையும் எனலாம். விஜய், சூர்யா என டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.