ஆலியா பட் தனது மகள் ரஹாவின் முகம் தெரியும் புகைப்படங்களை இனி சமூக வலைத்தளங்களில் பகிர மாட்டார் என்று முடிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரஹாவின் முகம் தெரியாத புகைப்படங்களைத் தவிர, அவர் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.
நடிகை ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது அவரது மகல் ரஹாவின் புகைப்படங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆலியாவின் ஜாம்நகர் அல்லது பாரிஸ் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைும் நீக்கப்பட்டுள்ளன. ஆலியாவின் புத்தாண்டு நாள் கொண்டாட்ட புகைப்பட தொகுப்பில் ரஹா இருந்தாலும், அவருடைய முகம் அதில் சரியாகத் தெரியவில்லை.
ரெடிட் இணையதளத்தில் ஆலியா பட்டின் இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இணையவாசி ஒருவர், “நான் ஆலியாவின் முடிவை 100% ஆதரிக்கிறேன். நான் ஆலியாவின் ரசிகன் இல்லை. பெரும்பாலும் அவரது விமர்சகனாகவே இருந்துள்ளேன். ஆனால் இணையத்தில் அதிகமான வக்கிரமானவர்கள் உள்ளனர். ஒரு பெற்றோராக, பாதுகாப்பு நடவடிக்கையாக அவள் என்ன நினைக்கிறாளோ அதைச் செய்ய வேண்டும்,” என்று எழுதியுள்ளார்.
மற்றும் ஒருவர் “இது நல்ல முடிவு. இனி மீடியாக்காரர்களும், போட்டோகிராஃபர்களும் இதை உணர்ந்து அவர்களை தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும். குழந்தைகளின் தனியுரிமையையும் பெற்றோரின் முடிவையும் மதிக்க வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒருவரோ ஆலியாவின் இந்த முடிவிற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்று யோசித்தார். மேலும் “நடிகர் சைஃப் அலிகான் -ஜேஹ் சம்பவம் அவர்களையும் பாதித்து இருக்கலாம். அதனால் தான் அவர்கள் மீடியாகாரர்களிடம் ரஹாவின் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவு நல்லது தான்.” என்றார்.
முன்னதாக, கடந்த ஜனவரியில், நடிகர் சைஃப் அலி கான் தனது மகன் ஜேஹைனிடம் அத்துமீறியவரிடமிருந்து காப்பாற்ற முயன்றபோது தாக்கப்பட்டார். இதையடுத்து சமீபத்தில், நெட்டிசன்களின் வீடியோ ஒன்றில் ஆலியா ஊடகங்களை நோக்கிச் சென்று, அவர்களுடன் பேச விரும்புவதால் கேமராக்களை அணைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் அவர்களுடன் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. ரஹாவின் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என்று அவர்கள் கூறியிருக்கலாம் என்று ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.
நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் – ரன்பீர் கபூருக்கு 2022ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆலியா-ரன்பீர் தம்பதி கடந்த 2023 கிறிஸ்துமஸ் தினத்தில் அவரை ரஹா எனும் பெயரில் உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அப்போதிருந்து, ரஹாவின் புகைப்படங்களை ஆலியா அவரது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்.