நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் சுமார் 700 கோடிக்கு வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பு வீடியோ வெளியாகி திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக சன்பிக்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் பெரிய ஹிட் ஆனது. இப்படத்தில் வந்த கதாப்பாத்திரங்களே 2ஆம் பாகத்திலும் தொடர்வர் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயிலர் 1 படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மருமகளாக நடித்திருந்த மிர்னா மோகன் ஆகியோர் அதே கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர். கேமியோ ரோலில் மாஸ் காட்டிய மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், புது வில்லன்கள் இதில் களமிறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ”
சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பழைய உட்லண்ட் ஹோட்டலில் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற ரஜினி சினிமா பயணத்தை இங்கிருந்துதான் தொடங்கினேன் என பழைய நினைவுகளை அசைபோட்டாராம். தனது நண்பர்களையும் அழைத்து சென்று இந்த இடத்தில் அமர்ந்து பேசி மகிழ்ந்ததாக செய்திகள் வெளியானது. சென்னையில் 15 நாட்கள் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற வாய்ப்புள்ளது.
ஜெயிலர் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளை கடந்து விட்டநிலையில், ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் வெளியானதும் சினிமா ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். இதனிடையே, சன்பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது வெளியிட்டிருக்கும் போஸ்டரில் வேட்டை ஆரம்பம் என குறிப்பிட்டுள்ளது. படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த வருடத்தின் கடைசியில் படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கூலி, ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கு பிறகு 3 மாதம் ரஜினிகாந்த் ரெஸ்ட் எடுக்கவுள்ளாராம். இந்த 3 மாத இடைவேளையில் தனது சுய சரிதையை எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ஜெயிலர் 2க்கு பிறகு எந்த இயக்குநருடன் இணைவார் என்ற தகவலும் வெளியாகவில்லை. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதன் பிறகுதான் எந்த முக்கிய முடிவையும் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.