தனுஷுடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி: கீர்த்தி சனோன்!

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர் இப்போது பாலிவுட்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெயின் என்கிற படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் டெல்லியில் மிகவும் மும்முரமாக நடந்துவருகிறது. ஏற்கனவே தனுஷும், ஆனந்த்தும் இணைந்த ராஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிருகிறது.

இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்திலும் நடித்துவருகிறார் தனுஷ். ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெயின் என்கிற படத்தில்தான் இப்போது தனுஷ் மும்முரமாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே தனுஷும், ஆனந்த்தும் இணைந்து ராஞ்சனா என்கிற வெற்றி படத்தை கொடுத்திருப்பதன் காரணமாக இப்படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடக்கும் IIFA விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி பேசுகையில், “தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராயுடன் தேரே இஷ்க் மெயின் படத்தில் பணியாற்றிவருகிறேன். டெல்லியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. மீண்டும் நான் அந்த ஷூட்டிங்கிற்கு வருவதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு அழகான படம். அதில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இதற்கு முன்பு நான் ஏற்காத ஒன்று. காதல் படங்கள்தான் எனக்கு பிடிக்கும். இதுவும் ஒரு காதல் திரைப்படம்தான். இந்தக் கதை வித்தியாசமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. தனுஷுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அது அற்புதமான ஒன்று. அதேபோல்தான் படமும் இருக்கும். இவர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.