‘ரெட்ரோ’ படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே!

‘ரெட்ரோ’ படத்துக்காக முதன்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே.

மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்துக்காக முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே. பிராந்திய மொழி படங்களில் முதன்முறையாக ‘ரெட்ரோ’ படத்துக்கு இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

இந்தக் கதையை கேட்டவுடன், இதற்காக தமிழ் வசனங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த முயற்சியை மனதில் வைத்து டப்பிங்கும் அவரே செய்யட்டும் என்ற முடிவை எடுத்துள்ளது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.