சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கங்குவா படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் கங்குவா வெளியானது. சிவா இயக்கிய இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை, கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதில், அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, கங்குவா படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது, “கங்குவா படத்தில் ஒரு சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். எனினும், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களை அந்தப் படம் சந்தித்ததைப் பார்த்தபோது அது என்னைப் பாதித்தது. ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது வருத்தமாக இருந்தது. இருப்பினும், என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்படுவது அநீதியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற பல தரம் குறைந்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான படங்கள் எல்லாம் மிகவும் கரிசனத்துடன் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது கணவர் நடித்த கங்குவா படத்தை கடுமையாகவும் மோசமாகவும் விமர்சித்தார்கள். இது எனக்கு அநீதியாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி விட்டார்கள். காரணம், கங்குவா படம் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் திரைக்கதை சரியில்லை என விமர்சித்தார்கள். அதேபோல், பின்னணி இசை மிகவும் மோசமாக இருப்பதாக கூறினார்கள். இது ரசிகர்களை படம் பார்க்கும் கவனத்தையும் ஆர்வத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியது. படத்தின் பின்னணி இசை தொடர்பாக ரசிகர்கள் மட்டும் இல்லாமல், இசையில் ஆஸ்கர் வாங்கிய ரசூல் பூக்குட்டியும் தெரிவித்தார்.
விமர்சனம்: படம் தொடர்பாக தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்ததால், ஜோதிகா சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினருக்கு ஆதரவாக கருத்துக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். ஜோதிகாவின் பதிவுக்கு இணையவாசிகள் ரவுண்டு கட்டி ஜோதிகாவை விமர்சித்தார்கள். இதனால் இணையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோதிகாவின் கருத்துக்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். படம் மாபெரும் தோல்வி படமாக மாறியதால், திரையரங்கில் இருந்து வெகு சீக்கிரம் வெளியேறியது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படமே மீண்டும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.