’ராபின்ஹுட்’ பட அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீலீலா!

‘ராபின்ஹுட்’ பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ரீலீலா. இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

நேற்று ஐதராபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீலீலா, ‘ராபின்ஹுட்’ பட அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறுகையில், ‘நான் இப்படத்தில் மீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மீராவாக நடித்தது அருமையான இருந்தது. நிதினுடன் இரண்டாவது முறையாக நடித்திருக்கிறேன். ராஜேந்திர பிரசாத்துடன் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.