ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தயார் செய்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பலர் நடிக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் படமாகவே கூலி தயாராகி வருகின்றது. ஆனால் இப்படம் LCU இல்லை என லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாகவே கூறிவிட்டார். மேலும் தன் வழக்கமான படங்களில் இருந்து கூலி சற்று மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என்றும் கூறினார் லோகேஷ். எனவே இதன் காரணமாக இப்படத்தின் மீதான ஹைப் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு கூலி திரைப்படத்திலிருந்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். கடந்த ஒரு சில நாட்களாக லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் வந்தது. ஆனால் தற்போது வரை அதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் படக்குழு வெளியிடவில்லை. எனவே கூலி டீசர் இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
இந்நிலையில் நீங்க அப்டேட் விடலான பரவாயில்ல, நாங்களே ஒரு போஸ்ட்டரை கிரியேட் செய்கின்றோம் என கூறி ரசிகர்கள் கூலி படத்தின் ஒரு போஸ்ட்டரை தயார் செய்துள்ளனர். அந்த போஸ்டர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. மிகவும் நேர்த்தியாக அருமையாக அந்த போஸ்ட்டரை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கூலி அப்டேட் கொடுங்க என தொடர்ந்து ரஜினி மற்றும் லோகேஷ் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.