விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அதில், அழகு நாச்சியாக நடித்த நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் சமீபத்தில் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நிர்வாண காட்சிகள் தயக்கமில்லாமல் நடித்தது பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.
சாய் அபயங்கர் இசையில் வெளியாகி உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான கட்சி சேர பாடலில் அழகு பதுமையாக நடனமாடியவர் நம்ம அழகுநாச்சி சமித்தா விஸ்வநாதன் தான். மேலும், ஸ்வீட் காரம் காபி, மாடர்ன் லவ், சட்னி சாம்பார் போன்ற வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். சாரி 111, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள மிஸ்டர் பாரத் படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுந்தர். சி, குஷ்பு தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சுழல் 2 வெப்சீரிஸில் லால், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுழல் வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் அதைவிட பிரம்மாண்டமாக உருவானது. அஷ்ட காளி திருவிழாவை மையப்படுத்தி இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் சப்ஜுன் இயக்கியுள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் இயக்குனர் சர்ஜுன் இரண்டு எபிசோடுகளை இயக்கியிருந்தார். அந்த இரண்டிலுமே பெண்கள் சிறைச்சாலையில் நடக்கும் கொடுமைகளும் பாலியல் தொல்லைகள் குறித்த காட்சிகளையும் ரொம்பவே போல்டாக சர்ஜுன் கையாண்டு இயக்கியிருப்பார். 2017 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தையே செம போல்டாக இவர் இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், நயன்தாராவின் ஐரா, பிரியா பவானி சங்கர் நடித்த பிளட் மணி மற்றும் புர்கா உள்ளிட்ட படங்களையும் இவர்தான் இயக்கியுள்ளார். பெண்கள் சிறைச்சாலைக்கு வரும் எட்டு பெண்களையும் ஜெயில் வார்டன் ஆடைகளை அகற்றச் சொல்லி நிர்வாணமாக நிற்க வைத்து சோதனையிடும் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக அதே சமயம் ஓவர் எக்ஸ்போஸ் இல்லாமல் வலிமையான வசனங்கள் மூலமாக அந்த காட்சியை நகர்த்தி இருப்பார். கௌரி கிஷன், மோனிஷா பிளெஸி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட 8 பேரும் அந்த காட்சியில் தயக்கமின்றி நடித்துள்ளனர்.
மேலும், அழகு நாச்சி கதாபாத்திரத்தில் நடித்த சமித்தா விஸ்வநாதனுக்கு பாத்ரூமில் அவர் குளிக்கும் போது பெண் கைதி ஒருவர் சபலத்துடன் அவர் குளிப்பதை கதவை திறந்து பார்ப்பதும் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க பாய்வதுமான காட்சிகளையும் இயக்குநர் சர்ஜுன் ரொம்பவே டீப்பாக உருவாக்கி இருப்பார். இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சம்யுக்தா விஸ்வநாதன் அந்த காட்சியில் நடித்தது பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். இயக்குநர் சர்ஜுன் என்னிடம் அந்த சீனை இப்படித்தான் பண்ணப் போகிறேன் என்றும் உங்களுக்கு கம்ஃபர்டபிளா இல்லை என்றால் சொல்லிவிடுங்கள் மாற்றி விடுகிறேன் என்றார். பெண்கள் சிறைச்சாலை குறித்து ரொம்பவே ராவாக எடுத்துக் கொண்டிருப்பதால், அந்த சீனுக்கும் கதைக்கும் தேவைப்பட்டதால் என்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு அதில் நடித்தேன் என வெளிப்படையாக சம்யுக்தா விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.