பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 (அ) எம்புரான் திரைப்படத்தின் அட்டகாசமான தமிழ் டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. த்ரிஷ்யம் 2 படத்துக்குப் பிறகு மோகன்லாலுக்கு மலையாளத்தில் மார்க்கெட் அடிவாங்கி வந்த நிலையில், இந்த படம் மீண்டும் ஒரு மான்ஸ்டர் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானின் சிக்கந்தர் மற்றும் எம்புரான் என இரு பெரிய படங்கள் வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் கிளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ் ஆக மோத காத்திருக்கின்றன.
வரும் மார்ச் 27ம் தேதி மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தை புரமோட் செய்யும் விதமாக அதன் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழில் அந்த டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் வேறலெவலில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுராஜ் வெஞ்சரமுடுவுக்கு இந்த 2ம் பாகத்தில் சிறப்பான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது டிரெய்லரில் தெளிவாக தெரிகிறது. டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் காட்சிகளும் மிரட்டுகின்றன. மோகன்லால் மற்றும் அவருக்கு துணையாக நிற்கும் கமோண்டோவாக வரும் பிரித்விராஜ் என பக்கா பேக்கேஜாக உள்ளது டிரெய்லர். கடைசியில் நீங்க யாரு? என்கிற கேள்வியும் அதற்கு லூசிஃபர் என மோகன்லால் சொல்லும் பதிலும் வெறித்தனம்.
மோகன்லாலை நடிகர் ரஜினிகாந்த் மைடியர் மோகன் உன்னோட எம்புரான் டிரெய்லர் ஃபென்டாஸ்ட்டிக்கா இருக்கு என நண்பனுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். லூசிஃபர் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஏற்கனவே பிரித்விராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.