வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை அபிநயா!

நடிகை அபிநயாவிற்கு சில நாட்கள் முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், ரசிகர்களுக்கு தன் வருங்கால கணவர் யார் என்பதை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் பிற மொழி படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு இப்போது தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கடந்த மார்ச் 9 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இத்தனை நாள் கழித்து தனது வருங்கால கணவர் யார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி, தன் காதலருடன் கோயில் மணியை அடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது தான் அந்த நபர் யார் என்பதை அபிநயா வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் அவர் நடிகர் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் விஷாலும் அபிநயாவும் காதலிக்கின்றனர் என வதந்திகளை பரப்பி வந்தனர், இது மிகவும் வைரலான நிலையில், அபிநயா முதல் முறையாக தன் காதல் பற்றி பொது வெளியில் கருத்து தெரவித்தார். சமீபத்தில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன். என்னோட சின்ன வயசு பிரண்ட் தான் என்னோட பாய் பிரண்ட். 15 வருஷமா இந்த உறவு தொடருது. அவரு என்னோட பிரண்ட். அதுனால அவர்கிட்ட எந்த விஷயமா இருந்தாலும் என்னால பேச முடியும். எந்த விதமான ஜட்ஜ்மெண்டும் இருக்காது. நாங்க இன்னும் எங்களோட கல்யாணம் பத்தி பிளான் எதுவும் பண்ணல. அதுக்கெல்லாம் டைம் இருக்கு. நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயம் நிறைய இருக்கு” என்றார்.

நடிகை அபிநயா திருமணம் செய்ய இன்னும் நேரம் இருக்கு. எனக்கு சாதிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு என கூறிவந்த நிலையில், இவர் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் செய்ததற்கு அவரை சுற்றி வரும் வதந்திகளே காரணம் என பலரும் கூறி வருகின்றனர். அதே சமயத்தில், தன் திறமையால், சினிமாவில் நல்ல உயரத்திற்கு வரும் அபிநயா வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.