டோலிவுட்டில் தன் நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை ஸ்ரீலீலா தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்து வருகிறார். இவர், பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகருடன் காதலில் விழுந்துவிட்டார் என செய்திகள் பரவத் தொடங்கின.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சம்பந்தப்பட்ட நடிகரின் தாயாரே அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவது போல பேசியுள்ள நிலையில், இப்போது நடிகர் கார்த்திக் ஆர்யனே வதந்திகளை ஊக்குவிக்கும் வகையிலான வேலையை செய்துள்ளார். இதனால், கார்த்திக் ஆர்யன்- ஸ்ரீலீலா ஜோடி தான் இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
கார்த்திக் ஆர்யன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீலீலாவுடன் டார்ஜிலிங்கில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், நீ தான் என் உயிர் என்ற அர்த்தம்படும்படியான (Tu Meri Zindagi Hai ❤️🔥) வார்த்தைகளுடன் ஹார்ட் ஸ்மைலியும் தீ ஸ்மைலியும் பயன்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்ததா அல்லது மறைமுகமாக இவர்கள் காதலை வெளிப்படுத்துகின்றனரா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
டோலிவுட் அழகியான ஸ்ரீலீலா பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்து வருகிறார் என்ற செய்திகள் சில காலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருவரும் ஆஷிக் 3 படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே டேட்டிங் வதந்திகள் தொடங்கின. ஆனால், இதை கார்த்திக் ஆர்யனின் அம்மா மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலீலா தனது முதல் பாலிவுட் படத்தில் உடன் சேர்ந்து நடிக்கும் கார்த்திக் ஆர்யனை காதலிப்பதாக வரும் தகவலுக்கு சமீபத்தில் கார்த்திக் வீட்டில் நடந்த விழாவிற்கு ஸ்ரீலீலா சென்றதும் வலு சேர்த்தது. இதையடுத்து தற்போது கார்த்திக் ஆர்யனின் அம்மா மாலா, அவர்களின் டேட்டிங் செய்திகளை மறைமுகமாக உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த ஐஃபா 2025 விழாவில் அவர் கரண் ஜோஹருடன் பேசியுள்ளார்.
அவருக்கு எப்படிப்பட்ட மருமகள் வேண்டும் என்று கரண் அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “வீட்டில் உள்ளவர்கள் ஒரு டாக்டரை விரும்புகிறார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஏற்கனவே ஒரு டாக்டருடன் வேலை செய்து வருகிறீர்கள் என்று அருகில் இருந்த கார்த்திக்கிடம் கரண் கூற, கார்த்திக் தனது பேச்சை மாற்ற முயன்றார். அவர் ஒரு உண்மையான டாக்டரைப் பற்றித்தான் பேசுகிறார் என்று கார்த்திக் கூறினார்.
உண்மையில் ஸ்ரீலீலா ஒரு டாக்டர் என்பது அனைவருக்கும் தெரியும். நடிப்பில் ஈடுபடுவதற்கு முன்பு அவர் எம்பிபிஎஸ் படித்தார். சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் தனது இறுதித் தேர்வுகளையும் எழுதினார். இப்போது கார்த்திக் ஆர்யனுடன் அவரது டேட்டிங் செய்திகள் வருகிறது. அதே நேரத்தில் ஒரு டாக்டர் வேண்டும் என்று அவரது அம்மா கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, அவர்களின் உறவு உண்மைதான் என்று தோன்றுகிறது.
ஆனால், பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வரும் கார்த்திக் ஆர்யன் மீது இதுபோன்ற வதந்திகள் ஏற்கனவே பல வந்துள்ளன. சாரா அலி கான், அனன்யா பாண்டே, கிருதி சனோன் போன்றவர்களுடன் கார்த்திக்கை இணைத்தனர். ஆனால், இது குறித்து அவர் ஒருபோதும் எதுவும் பேசவில்லை. இப்போது ஸ்ரீலீலாவுடன் டேட்டிங் குறித்தும் கார்த்திக் எதுவும் பேசவில்லை.
ஸ்ரீலீலா விஷயத்தில் சொல்லப்போனால். டோலிவுட்டில் ஏற்கனவே தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ள அவருக்கு இதுபோன்ற டேட்டிங் வதந்திகள் வந்ததில்லை. பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவுடன், அதுவும் அங்கு தனது முதல் இணை நடிகருடனேயே டேட்டிங் வதந்திகள் வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் எப்படிப் பிரதிபலிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.