திரிஷா வெளியிட்ட போஸ்ட்டால் குவியும் வாழ்த்து!

நடிகை திரிஷா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதில் புடவை கட்டிக் கொண்டிருக்கும் திரிஷாவிற்கு தலையில் ஒருவர் பூ வைப்பது போன்றும், அப்போது திரிஷா வெட்கப்படுவதும் போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் குழந்தை பிறந்து, அந்த குழந்தைகளும் வயதுக்கு வந்த பிள்ளைகளாக மாறிவிட்டார்கள். ஆனால் 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி 41 வயதான திரிஷா இன்னும் குமரிப்பெண் போல அழகாக அப்படியே இருக்கிறார். இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? என்பதுதான் பலருடைய கேள்வி. சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனால் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை கொடுத்து கொண்டிருக்கிறார். இவர் கதாநாயகியா? வில்லியா? என்று குழம்பும் வகையில் தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அ

கொடி படத்தின் முலமாக வில்லியாக அறிமுகமான திரிஷா இப்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் தன்னுடைய இன்னொரு பக்க நடிப்பையும் வெளிகாட்டி இருந்தார். அழகான ராட்சசி என்று இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷனில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது. அதுபோல விஜயுடன் எடுக்கும் புகைப்படங்களை இவர் குதர்க்கமாக பதிவிட அதை சிலர் சோஷியல் மீடியாவில் வேண்டும் என்றே இவரைக் குறித்து பல வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். ஆனால் என்னை பற்றி என்ன விஷயம் வந்தாலும் அதையெல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன், என்னுடைய வழியே வேறு என்று சொல்லும் விதமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை அலற விட்டுக் கொண்டிருக்கும் திரிஷா இன்று பச்சை மற்றும் கோல்டு கலர் புடவையில் தேவதை போல காட்சி கொடுத்திருக்கிறார்.

எளிமையான மேக்கப்பில் கல்யாண பொண்ணு போல இருக்கும் திரிஷாவின் தலையில் யாரோ ஒருவர் மல்லிகை பூ சூட்டிக் கொண்டிருக்க திரிஷா அப்போது வெட்கத்தில் தலை குனிந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் திரிஷா “காதல் எப்போதும் வெல்லும்” என்று பச்சை ஹார்ட் பறக்க விட்டு இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் பல ரசிகர்கள் பல்வேறு கேள்வி எழுப்புகிறார்கள். அதில் அதிகமான ரசிகர்கள் திரிஷாவுக்கு என்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டதா? திரிஷாவின் காதலர்தான் தலையில் பூச்சூட்டுகிறாரா? அதனால் தான் திரிஷா வெக்கப்படுகிறாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதுபோல இன்னும் ஒரு சிலர் திரிஷாவை மார்டன் உடையில் பார்ப்பதை விடவும் புடவையில் பார்ப்பது தான் அருமையாக இருக்கிறது என்று ஆகா ஓகோ என கவிதைகளையும் கொட்டுகிறார்கள்.

கடந்த மாதத்தில் காதலர் தினத்தில் தன்னுடைய நாய்க்குட்டி தான் தன்னுடைய காதலர் என்று உருக்கமாக போஸ்ட் போட்ட திரிஷா இப்போது காதல் எப்போதும் வெல்லும் என்று தன்னுடைய வெட்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் நிலையில் திரிஷா கமிட் ஆகிவிட்டார் என்று சிலர் வருத்தத்தோடு அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வதையும் பார்க்க முடிகிறது.