அதிக தொகைக்கு விற்கப்பட்ட ‘இட்லி கடை’ ஓடிடி உரிமம்!

இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இதில், இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார். நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்.10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தேதியில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனால், இட்லி கடை வெளியீட்டில் மாற்றம் ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 45 கோடிக்கு பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.