விஜய் தேவரகொண்டாவுடன் இணைகிறார் கீர்த்தி சுரேஷ்!

விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘கிங்டம்’ படத்தினைத் தொடர்ந்து ‘ரவுடி ஜனார்தன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தில் ராஜு தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதன் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘ராஜா வாரு ராணி காரு’ மற்றும் ‘அசோக வனம்லோ அர்ஜுனா கல்யாணம்’ ஆகிய படங்களை இயக்கிய ரவி கிரன் கோலா இயக்கவுள்ளார். இதன் ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் இதன் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தேதிகள் ஒத்துவராத காரணத்தினால் தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக ‘கிங்டம்’ வெளியாகவுள்ளது. நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தினை கெளதம் டின்னானுரி இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் மே 30-ம் தேதி வெளியாகவுள்ளது.