சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ ஏப்ரல் 18-ம் தேதி ரிலீஸ்!

சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆனால், பல்வேறு படங்கள் வெளியீட்டால், இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது புதிய ட்ரெய்லருடன் ஏப்ரல் 18-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு.

தற்போது வெளியிட்டுள்ள 2-வது ட்ரெய்லருக்கு விஜய் சேதுபதி பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். ஒரு பேருந்தில் நடக்கும் கொலையை ஒரே இரவில் கண்டுபிடிப்பது போன்று இப்படத்தின் கதை இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரியவருகிறது.

அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இப்படத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஜெய் கார்த்திக், இசையமைப்பாளராக சுந்தர மூர்த்தி, எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். டுவின் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைஸ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.