‘வீர தீர சூரன்’ மூன்றாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்த விக்ரம்!

எஸ்.யு.அருண்குமார் இயக்கிய ‘வீர தீர சூரன் 2’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீர தீர சூரன் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார் விக்ரம்.

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

இந்தநிலையில் ‘வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதல் பாகமும் மூன்றாம் பாகமும் கண்டிப்பாக எடுப்போம் என்ற அப்டேட்டை பகிர்ந்துள்ளார் விக்ரம். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.