சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்திருக்கிறார். அதோடு தமிழ் சினிமா நாறிப்போய் கிடக்கிறது முதலில் இதை செய்யுங்கள் என்று சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
சில நாட்களாகவே இணையத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் வீடியோ தான் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் நடிகையா இப்படி செஞ்சாங்க என்று பலரும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்த நிர்வாண புகைப்படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வீடியோ காலில் ஒரு நபர் சொல்வதை எல்லாம் செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இருக்கிறது. ஆரம்பத்தில் இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் இந்த வீடியோவின் லிங்க் கேட்டு இணையத்தில் புள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை அது ஏஐ என்பது போன்று ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை சம்பந்தப்பட்ட நடிகை பகிர்ந்து இருந்தார். அவர் பதிவு வெளியிட்ட அடுத்த நாளே அவருடைய இன்னொரு வீடியோவும் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு சிலர் தன் மீது தவறு இல்லை என்றால் அந்த நடிகை போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அதை ஆதாரமாக மக்களிடம் பகிர்ந்து தன் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கலாம் அவர் பற்றி அதிகமான சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில் எதற்காக அவர் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் ஒரு சிலர் குறிப்பிட்ட யாரோ ஒருவர் அந்த நடிகையை பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறார்கள் அதனால் அவரிடம் போராடுவதற்கு இந்த நடிகையால் துணிச்சல் இல்லாமல் கூட இருக்கலாம் அதனால் இவர் அமைதியாக இருக்கலாம் என்றும் கமெண்டுகளை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அந்த வீடியோவில் இருப்பது நிஜத்தில் அந்த நடிகையாக இருந்தால் கூட அந்த நடிகையின் வீடியோவை பகிர்ந்தது தவறுதான். அதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இப்படி இணையத்தில் பல்வேறு பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ குறித்து நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
சமீபத்தில் சீரியல் நடிகை ஒருவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அந்த நடிகை சொன்ன பிறகும் அந்த வீடியோவை பார்ப்பதற்காக பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உங்களிடம் அந்த வீடியோ இருந்தால் அந்த வீடியோவை யாருக்கும் அனுப்பாமல் அதை டெலிட் செய்து விடுங்கள். வீடியோவை ஷேர் செய்யாதீர்கள் காமத்தின் உச்சத்தை அடைவதற்காக இப்படி கேவலமாக அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதற்காக சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தீனி போடாதீர்கள். அது பெரிய தப்பு.
ஒருவேளை அந்த பெண் தப்பு செய்திருந்தால் அவர் விக்டிம் கிடையாது. ஆனால் அதே பெண் தப்பு செய்யாமல் அவர் சொன்னது போல அது ஏ ஐ வீடியோவாக இருந்தால் அந்த பெண் தான் பாதிக்கப்பட்டவர். அதனால் அந்த பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற செயலை செய்யாதீர்கள். அதேபோல தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரபலங்களிடம் நான் நடிகைகள் சார்பாக ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் சினிமா நாறிப்போய் கிடக்கிறது உண்மையாக திறமை இருக்கும் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கொடுங்கள். அதை விட்டுவிட்டு தவறான பாதைக்கு நடிகைகளை போக அனுமதிக்காதீர்கள் என்று அந்த வீடியோவில் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.