நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரை அரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெள்ளிக்கிழமை (ஏப்.04) வெளியிட்டுள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துக்கு ஒரு ரகளையான ட்ரெய்லர். கலர் புல்லாக அர்ஜுன் தாஸின் நடனத்துடன், பின்னணியில் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாடலுடன் தொடங்கும் ட்ரெய்லர் முழுக்கவே சரவெடிதான். படம் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் கணிக்க முடிகிறது.
சண்டைகாட்சிகள் ட்ரெய்லரில் கட் செய்யப்பட்ட விதம் பட்டாசு ரகம். சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன ‘இருங்க பாய்’, ‘கார்டு மேல 16 நம்பர் சொல்லுங்க’ போன்றவை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே போல யோகி பாபு சொல்லும் ‘ஏகே வர்றார் வழிவிடு’ என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது. படத்தில் பழைய அஜித் படங்களின் ரெஃபெரன்ஸ்களை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அள்ளித் தெளித்திருப்பார் போல இருக்கிறது.