விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து தனி முத்திரையை பதித்துவருபவர் ஸ்ருதி நாராயணன். சீரியல் மட்டுமின்றி சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸிலும் அவர் முக்கியமான ரோலினை ஏற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வரிசையாக பெரிய திரை வாய்ப்புகளும் வர ஆரம்பித்திருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் அவரது அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ருதி பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
சீரியலில் நடித்தால் பெரிய திரையிலும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி பலர் சின்னத்திரை டூ பெரியதிரைக்கு சென்று வெற்றி பெற்றவர்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்ருதி நாராயணன். கார்த்திகை தீபம் என்கிற சீரியலில் முதன்முறையாக தனது பயணத்தை ஆரம்பித்தார் அவர். அந்த சீரியலில் அவருக்கு ஓரளவு முக்கியமான ரோல்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்தார். அதன் பிறகு மாரி சீரியலில் நடித்த அவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இந்த சீரியல்தான் தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. சீரியலை கண்டு ரசிக்கும் பலரும் ஸ்ருதியின் நடிப்பையும் பாராட்டிவருகிறார்கள். மேலும் சீரியல் மூலம் அவருக்கு வெப் சீரிஸ் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட நிலைமையில் அவரது அந்தரங்க வீடியோ என ஒன்று சொல்லி வெளியானது. அது பயங்கரமாக ட்ரெண்டும் ஆனது. 23 வயதே ஆன ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கக்கூடாது என்று பலரும் கூறினார்கள். முதலில் ஒரு வீடியோ வெளியானபோது விளக்கமளித்திருந்த ஸ்ருதி நாராயணன், “இந்த விஷயத்தில் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டது. ஃபோன் திரைக்கு பின்னால் இன்னும் உறுதிப்படுத்தாத ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்க துடிக்கிற அந்த வெட்கக்கேடான மனிதரைப் பற்றி யாருக்கும் பேச நேரமில்லை. இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றிதான் நடந்துகொண்டிருக்கிறது என்று இரண்டு நொடிகள்கூட யாரும் யோசிக்கவில்லை. இப்படி நடப்பதால் அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்படலாம். காட்டுத் தீ போல் இதை பகிர்வதன் மூலம் அனைத்து ஆண்களுமே காமத்துக்கு ஏங்குபவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. நானும் உணர்வுகளை கொண்ட ஒரு பெண் என்பதை எத்தனை முறைதான் சொல்வது. மனித குலகத்துக்காக இதை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
அப்படி அவர் விளக்கமளித்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர் தொடர்பான இன்னொரு வீடியோ வெளியானது. தொடர்ந்து வெளியான இரண்டாவது வீடியோ மேற்கொண்டு இந்த விஷயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேண்டுமென்றே திட்டமிட்டு இதை செய்கிறார்கள் என குரல்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க இரண்டாவது வீடியோவுக்கு பிறகு, ’15 படங்கள் இயக்கிய இயக்குநர்தான் அந்தவேலையை செய்தார்’ என கூறியிருந்தார். அவர் அப்படி சொல்லியதைத் தொடர்ந்து அந்த இயக்குநர் யாராக இருக்கும் என்று தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் நெட்டிசன்கள்.
இந்நிலையில் ஸ்ருதி இப்போது Guts என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “எனக்கு ஒன்றுமே தெரியாது. இந்தப் படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ரங்கராஜ் சொன்னாரோ அதைத்தான் செய்தேன். அவ்வளவு நுட்பமாக எனக்கு சொல்லிக்கொடுத்தார். கண்டிப்பாக இந்தப் படத்துக்கு உங்களது ஆதரவு வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என அத்தனையையும் அவரே கற்றுக்கொடுத்தார். இந்தப் படத்தில் நான் இரண்டாவது ஹீரோயினாக செய்திருக்கிறேன். ஆனால் அந்த கேரக்டர் நன்றாகவே இருக்கிறது” என்றார்.