சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது.
தற்போது, டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் நடித்துள்ளார். பிரேம் ஆனந்த இயக்கிய இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடலான கிஸா – 47 வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வருமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.