விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த ஜனனி லியோ திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு சென்னையில் பல இடங்களில் வீடு தேடி அலைந்தது குறித்து வருத்தமாக பகிர்ந்து இருக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஏற்கனவே இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸில் கலந்துகொண்ட லாஸ்லியாவிற்கு சினிமாவில் நல்ல பிரபலம் கிடைத்திருக்கிறது. அதேபோல ஜனனியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சண்டைகளும் வாக்குவாதங்களும் இவருக்கு பிரபலத்தை கொடுத்து விட்டது. ஆரம்பத்தில் ஜனனிக்கு தான் அந்த சீசனில் அதிகமான பேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜனனி எதற்கெடுத்தாலும் அழுது கொண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததும் அவருக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கிவிட்டது. அந்த நேரத்தில் அவர் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகிவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தொடர்ந்து இப்போது கதாநாயகி ஆகவும் சில திரைப்படங்களில் ஜனனி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தபோது நடந்தது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, நான் இலங்கையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் சென்னைக்கு வந்தேன். அப்போது இங்கே வீடு எடுத்து தங்கவில்லை. ரூம் எடுத்து லாட்ஜில் தங்கி இருந்தேன். பிறகு பிக் பாஸ் போய்விட்டேன். பிக் பாஸ் முடிந்ததும் ஊருக்கு கிளம்பலாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில் லியோ வாய்ப்பு கிடைத்தது. அதற்காக காஷ்மீருக்கு சூட்டிங் போய் விட்டோம். அதனால கொஞ்ச நாள் பிரச்சனை இல்லாமல் இருந்தது. பிறகு சென்னைக்கு வந்ததும் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.
அந்த நேரத்தில் வீடு தேடி அலைந்தபோது பல இடங்களில் வீடு கிடைக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் நீங்கள் பிக் பாஸ் ஜனனி தானே என்று கேட்கிறார்கள். இல்லையென்றால் நீங்கள் லியோ படத்தில் நடித்தீர்கள் என்று என்னை அடையாளப்படுத்துகிறார்கள். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்போ தமிழகத்தில் எனக்குனு ஒரு அடையாளம் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் எனக்கு வீடு கிடைக்காமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். இப்போது நான் நினைத்த மாதிரியே ஒரு வீடு கிடைத்திருக்கிறது. சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் எனக்கு தமிழ் மக்கள் கொடுத்த பாசமும் வரவேற்பும் தான். இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.