கவர்ச்சி நடிகையாக சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி வைத்து ஸ்மோக் என்கிற பெயரில் ஒரு வெப் தொடரை தயாரித்து உள்ளார். இதை ஷார்ட்பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் சேர்ந்து தயாரித்து உள்ளார். இதில் சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். இந்த சீரிஸின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி வெப் தொடர் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படம் குறித்து நடிகை சோனா யூடியூப் சேனலுக்கு பல விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
என்னுடைய வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக எடுக்கும் அளவிற்கு, என் வாழ்க்கையில் சுவாரசியங்களும், திருப்பங்களும் நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பல விஷயம் இருக்கும். ஆனால்,வெளியே சொல்ல தயங்குகிறார்கள். ஆனால், நான் மட்டும் என் வாழ்க்கையில் நடந்ததை வெளியில் சொல்கிறேன். அதற்கு காரணம், எனக்கு நிம்மதி வேணும், சந்தோஷம் வேணும், பிளஸ் சோனா என்கிற ஒரு நடிகையின் பிம்பம், உலகத்திற்கு வேறு மாதிரி கட்டப்பட்டுள்ளது. அதை யாரும் வேணும் என்று பண்ணல, நான் நடந்து கொண்ட விதமும், சில இமேஜினேஷனும் கலந்து, இது தான் சோனா என்கிற பிம்பத்தை உருவாக்கி இருக்கு. ஆனால், நான் அப்படி கிடையாது என்பதை உலகத்திற்கு சொல்வதற்காகத்தான் இந்த படம்.
அதேபோல, பல கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது அதை மற்றவர்கள் ஏன் படமாக எடுக்க வேண்டும் என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்குத்தானே தெரியும் அதை நானே படமாக இருக்கிறேன் என்று முடிவெடுத்து எடுக்கப்பட்ட படம் தான் ஸ்மோக். ஒரு பத்திரிக்கையில் என்னுடைய வாழ்க்கை வரலாறு 26 வாரங்கள் தொடராக வந்தது. அதன் பிறகு புத்தகமாகவும் வந்தது. அப்போதுதான், என்னுடைய வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து பாம்பையிலிருந்து ஒரு எழுத்தாளரை அழைத்து வந்து எழுதி முடித்து விட்டோம். இது குறித்து என்னுடைய அம்மாவிடம் நான் சொன்ன, உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய் என்றார். ஆனால், நான் உயிரோடு இருக்கும் வரை அது வெளிவர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதோடு அதை நான் நிறுத்தி விட்டேன். அதன்பிறகு பலமுறை அந்த படத்தை எடுக்க முயற்சி செய்து, அது முடியாமல் போய், 10 ஆண்டு பிறகு, இப்போது தான் அது வெளிவர இருக்கிறது.
அந்த வெப் தொடரில் எந்தவிதமான பொய்யையும் நான் சொல்லவில்லை, என்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை, நான் கதையாகச் சொல்லி இருக்கிறேன் தவிர பொய் இல்லை. யாரையும் பழி வாங்குவதற்காக இதை நான், தொடராக எடுக்கவில்லை, என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள், அதற்கு எதிராக நடந்த சில விஷயங்கள் ரெண்டும் கலந்து என்ன ஆச்சு. இதில் நியாயம் இருக்கிறதா.. இல்லையா.. என்பதை படம் பார்க்கும் ஆடியன்ஸ் முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால், நடந்த அந்த விஷயங்களால் என் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை தான், நான் படத்தில் சொல்லி இருக்கிறேன்.
அது மட்டுமல்லாமல் என்னுடைய வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள், பல தோல்வி வந்து இருக்கின்றன அப்பொழுதும் நான் சிரித்த முகத்தோடு தான் இருக்கிறேன் என்பதை ஒரு மெசேஜ் ஆகவும் இந்த படத்தில் நான் சொல்லி இருக்கிறேன். கடந்த பத்து வருடமாக எனக்கு எந்த படவாய்ப்பும் வரவில்லை, அது சினிமாவில் இருக்கும் பால்டிக்ஸ் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இதனால், ஒரு கட்டத்தில் நான் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி இருந்தேன். ஆனால் நான் எந்த வேலை செய்தாலும் அதற்குள் புகுந்து, எனக்கு டார்ச்சர் கொடுத்தார்கள். இதன்பிறகு தான், இனிமேல் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று வெளியில் வந்தேன். யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது. ஆனால், அதை நான் இப்பொழுது வெளியிட மாட்டேன். என்னை தொந்தரவு செய்தால், நிச்சயம் அந்த ஆதாரத்தை நான் வெளியிடுவேன். இதுவரையில் நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை, உலகத்திற்கே அது யார் என்று தெரிந்திருந்தாலும். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நான் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன். ஆனால், மீண்டும் மீண்டும் எனக்கு டார்ச்சர் கொடுத்தால் நிச்சயமாக அந்த பெயரை நான் சொல்லி விடுவேன்.
இப்போது என்னிடம் நண்பர்கள் பணம் என எதுவுமே இல்லை. ஆனால், நான் உண்மை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் நிச்சயம் என்னை ஏமாற்றாதே என்று நான் நினைக்கிறேன். நான் ஏதாவது, யாருக்காவது கெடுதலோ, தவறு செய்து இருந்தால், இந்த உலகத்தை நினைத்து நான் பயப்பட தேவையில்லை. கடவுளே எனக்கு நிச்சயமாக தண்டனை கொடுத்திருப்பார் என்று நினைப்பவள் நான். தெரியாமல் நான் யாரையாவது காயப்படுத்தி இருக்கலாம். ஆனால் நான் தெரிந்து யாரையும் காயப்படுத்தியது இல்லை. என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ஸ்மோக் என பெயர் வைக்க காரணம், நெருப்பை பார்க்கலாம், நெருப்பை உணரலாம், நெருப்பு எவ்வளவு ஆபத்தானது என்று தெரியும். ஆனால், என்னுடைய நெருப்பு என்னுடைய மனதிற்குள் இருக்கிறது. அதை நான் பூட்டி பூட்டி வைத்து அது புகையாக தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. நான் வெளியில் சொல்லவும் முடியாமல், தாங்கவும் முடியாமல் என்னுடைய 35 ஆண்டு காலம் நான் வாழ்க்கையை தொலைந்துவிட்டேன். என் மனதில் ஏற்பட்ட வலியை நான் படமாக எடுத்த போது என் மனத்திற்கு ஆறுதல் கிடைத்து. இவ்வாறு நடிகை சோனா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.