அஜித் சாரோட பிரியாணிய மிஸ் பண்ணிட்டேன்: பிரியா வாரியர்!

அஜித் சாரிடம் இரண்டு விஷயங்களை மிஸ் செய்து விட்டேன். அதில் ஒன்று அவர் செய்து கொடுக்கும் பிரியாணி; இன்னொன்று சாருடன் ஒரு ட்ரைவ்.. என்று பிரியா வாரியர் கூறியுள்ளார்.

குட் பேட் அக்லி படத்தின் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குட் பேட் அக்லி படக்குழு கலந்து கொண்டது. இந்த நிகழ்ச்சியில் பிரியா வாரியர் பேசியதாவது:-

என்ன சொல்வதென்றே தெரியவில்லை; நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படம் தமிழில் எனக்கு இரண்டாவது திரைப்படம் தான். இதற்கே எனக்கு இந்த மாதிரியான ஒரு அன்பு கிடைத்திருக்கிறது.
ரசிகர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த இடத்தில் நான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நித்யாவை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. படத்தில் நீங்கள் அஜித்தின் 64 படத்தை இயக்குவது போன்ற ஒரு குறியீட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் மிகவும் ஓப்பனாக கேட்கிறேன் அந்தப்படத்திலும் என்னை நீங்கள் நடிக்க வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அஜித் சாருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் அஜித் சாரின் உண்மையான ரசிகையாக இருப்பேன். ஆனாலும் அஜித் சாரிடம் இரண்டு விஷயங்களை மிஸ் செய்து விட்டேன். அதில் ஒன்று அவர் செய்து கொடுக்கும் பிரியாணி; இன்னொன்று சாருடன் ஒரு ட்ரைவ்.. இரண்டும் தற்போது என்னுடைய பக்கெட் லிஸ்ட் இருக்கிறது. வருங்காலத்தில் அது நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற குட் பேட் அக்லி வெற்றிக்கொண்டாட்டத்தில் பேசிய பிரியா, ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பலரும் 2018ல் ‘அடார் லவ்’ படத்தில் நான் வைரலானது போல மீண்டும் வைரல் ஆகிவிட்டாய் என்று என்னிடம் சொல்கிறார்கள். உண்மையில் நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கலாம் என்பதுதாகத்தான் இருந்தது. ஒரு கிளாசிக் ரெட்ரோ பாடல்.. அதுவும் சிம்ரன் மேம் பாடிய பாடலுக்கு, நான் சரியான பங்களிப்பை கொடுப்பேன் என்று இயக்குநர் ஆதிக் நம்பியதற்கு நன்றி. நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று பேசினார்.