விண்ணைத் தாண்டி வருவாயாவுக்கு அப்புறம் தக் லைஃப் படத்துல எனக்கும் சிம்புவுக்கும் மேஜிக் ஒர்க் அவுட் ஆகிருக்கு என நடிகை த்ரிஷா ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
மணிரத்னம்- கமல் ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கல்ட் படம் மீண்டும் வருமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இந்தப் படம் கொடுத்த தாக்கத்தால் இந்த கூட்டணி மீண்டும் எப்போது சேரும் என பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர். இந்த சமயத்தில் தான் அவர்கள் கூட்டணியில் தக் லைஃப் படத்தின் அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டது. அத்துடன் வித்தியாசமான கெட்அப்பில் கமலை பார்த்த ரசிகர்கள் இது எந்த மாதிரியான படம் எனத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வத்தை காட்டினர்.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிலம்பரசன் கூறியதாவது:-
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. பொதுவாவே மணிரத்னம் சாரோட படத்துல ஒரு சின்ன பார்ட்டா இருக்குறது எல்லாருக்கும் ஆசை. ரஹ்மான் சார் மியூசிக்ல, என் ஆன் ஸ்கிரீன் குரு கமல் சார் கூட நடிக்கன்னு நாங்க எல்லாம் ஒன்ன இந்தப் படத்துல நடிக்கிறது கனவு மாதிரி இருக்கு.
ஆரம்பத்துல கொஞ்ச நாள் நடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. இதுக்கு முன்னாடியே மணி சார் கூட செக்கச் சிவந்த வானம் படம் பண்ணிருந்தாலும் நான் கொஞ்சம் கொஞ்சமா தான் அவருக்கு தகுந்த மாதிரி நடிக்க கத்துக்கிட்டேன். ஆனா இந்தப் படத்துல ஒரு பக்கம் கமல் சாரும், இன்னொரு பக்கம் மணி சாரும் இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் என்ன பண்ணப் போறதுன்னே தெரியாம இருப்பேன்.
இந்த சமயத்துல நான் கமல் சாருக்கு நன்றி சொல்லிக்கணும். நான் என்ன தான் சின்ன வயசுல இருந்தே நடிச்சிருந்தாலும் கமல் சார் முன்னாடி நான் நடிக்குறது எனக்கு ரொம்பவே பெருமையான தருணமா இருந்தது. அவர் என்ன ரொம்ப நல்லா பத்துக்கிட்டாரு. என்ன என்கரேஜ் பண்ணாரு. அவரு பக்கத்துலயே எனக்கு இடமும் கொடுத்தாரு. படம் ஜூன் மாசம் தேதி ரிலீஸ் ஆகுது. இப்போ படத்த பத்தி நிறைய பேச முடியாது. இருந்தாலும் இது வழக்கமான படத்துல இருந்து வித்தியாசமானதா இருக்கும்.
நாயகன் படத்துக்கு அப்புறம் கமல் சாரும் மணி சாரும் ஒன்னா சேர்ந்து நடிச்சிருக்காங்க. ஒரு ஃபேன் பாயா இருந்து அவங்களோட சேர்ந்து நடிக்குறது எல்லாம் பெருமையான தருணம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு அப்புறம் த்ரிஷாவோட எப்போ சேர்ந்து நடிப்பீங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க. அதுவும் இந்தப் படத்துல நிறைவேரிடுச்சு. அசோக் செல்வன் நடிப்பு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ரஹ்மான் சார் இந்தப் படத்துக்கு ரொம்ப நல்லா மியூசிக் போட்டுருக்காரு. பாட்டு எல்லாம் சீக்கிரம் ரிலீஸ் ஆகும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, “இது ஒரு லெஜண்ட்ரி ஸ்டேஜ். இந்தப் படம் சைன் பண்ணினதுக்கு அப்புறம் என்னோட போஸ்ட்லயே நான் போட்டேன் கனவு எல்லாம் நிஜமாகப் போகுதுன்னு(dreams keep coming true). அதுக்காக மணி சார், கமல் சார், ரஹ்மான் சாருக்கு நன்றி. விண்ணைத் தாண்டி வருவாயாவுக்கு அப்புறம் தக் லைஃப் படத்துல எனக்கும் சிம்புவுக்கும் மேஜிக் ஒர்க் அவுட் ஆகிருக்கு. எனக்கு இந்தப் படத்தில் அதிகமாக சிம்புவுடனும் கமலுடனும் தான் காட்சிகள் இருக்கு. அபிராமியோட ஒரு பாட்டுல நடிச்சிருக்கேன். அபிராமியும் நானும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். 22 வருஷத்துக்கு முன்னாடி நாங்க மீட் பண்ணுனது பத்தி எல்லாம் பேசுவோம்” என்றார்.