ஏ.ஆர்.ரகுமான் ரூ 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீர ராஜ வீர பாடலை காப்புரிமையை மீறும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளதாக பாடகர் வாசிஃபுதீன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூ 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 என்ற படம், கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை ஒட்டியது. அந்த கதையை மையமாக வைத்து அதில் கமர்சியல் கலந்து எடுக்கப்பட்டது பொன்னியின் செல்வன் பார்ட் 1. இதையடுத்து பொன்னியின் செல்வன் பார்ட் 2 எடுக்கப்பட்டது. இந்த படத்தில் சரத்குமார், பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைத்திருந்தார். இவர் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். அதிகம் ஊதியம் பெறும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் உள்ளார். தற்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்திற்கும் ரகுமான்தான் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையை கொண்டிருக்கும். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு ரகுமான் இசையமைத்தார். இதையடுத்து அதன் இரண்டாவது பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. அதற்கும் அவர்தான் இசை! இந்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணியின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இந்த படத்தில் ரகுமானின் வீர ராஜ வீர பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாசிஃபுதீன் தாகூர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது தனது தாத்தா, தந்தை இயற்றிய சிவஸ்துதி இசையை மையமாக கொண்டு அந்த பாடல் அமைக்கப்பட்டது என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் காப்புரிமை மீறப்பட்டதாக கூறி ரூ 2 கோடியை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என ஏ.ஆர்.ரகுமானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.