கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீலீலாவுக்கு குழந்தைகள் மீது தனி பிரியம், பாசம். தற்போது இவர் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார். பெண் குழந்தையை இவர் தத்தெடுத்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ‘வீட்டுக்கு புதிய வரவு’ என்று தனது மூன்றாவது குழந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த குழந்தையை நடிகை அதிகமாக கொஞ்சி மகிழ்வது வீடியோவில் உள்ளது. கிஸ் கிஸ்ஸிக்கு பாடலுக்கு குழந்தையுடன் நடிகை ஸ்ரீலீலா பாடி மகிழும் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “வீட்டுக்கு வருவாயா” என்று அந்த குழந்தையை கொஞ்சும் நடிகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவரது இந்த வீடியோ மற்றும் பதிவுகள் நெட்டிசன்கள் மனதை கவர்ந்துள்ளது. முதல் புகைப்படத்தில் இவர் அந்த குட்டி குழந்தையின் கன்னத்தில் அன்பான முத்தம் கொடுத்துள்ளார். இரண்டாவது புகைப்படத்தில் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த புகைப்படங்களுடன் வீட்டுக்கு புதிய வரவு என்று எழுதியுள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா குழந்தைகளுக்கு மீது தனி பிரியம் வைத்துள்ளார். தனது 21வது வயதில் 2022ல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற பிறகு குரு மற்றும் ஷோபிதா என்ற இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்தார். அன்றிலிருந்து குழந்தைகள் மீது தனி பிரியம் வைத்துள்ளார்.