நடிகை சமந்தா தனக்கு உதவி செய்த பாடகி சின்மயி கணவர் நடிகர் ராகுல் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வெற்றி பெறுவது என்பது ஒன்றும் எளிமையான காரியம் கிடையாது. ஒரு சில நடிகைகள் மட்டும்தான் தங்களுடைய திறமையால் பல பிரச்சனைகள் வந்தாலும் அதில் ஜெயித்து நிற்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சமந்தா. முதலில் மாடலாக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். சின்ன கேரக்டராக இருந்தாலும் அதிலும் தன்னுடைய தனித்துவம் வெளியே தெரியும்படி நடித்திருந்தார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதிலும் பானா காத்தாடி, நான் ஈ, தெறி போன்ற படங்கள் சமந்தாவுக்கு தமிழில் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருந்தார்.
குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தார். சோசியல் மீடியா பக்கங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவரோடு நடித்த நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தெலுங்கு ரீமேக்கில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது இருவருடைய வீட்டின் சம்மதத்தோடு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களிலேயே இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். சமந்தாவின் கஷ்ட காலம் அந்த பிரிவுக்கு பிறகு சமந்தாவிற்கு மையோசிடிஸ் என்ற நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் கஷ்டப்பட்டு மீண்டும் வந்து கொண்டிருப்பதாகவும் சமந்தா அறிவித்து இருந்தார்.
தன் உடலில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி வந்து கொண்டிருக்கும் சமந்தாவிற்கு கடந்த வருடத்தில் பெரிய அடி விழுந்தது. அதாவது அவருடைய தந்தையின் இறப்பு செய்தி சமந்தாவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து இப்போது மீண்டு வந்து நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதுபோல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதியும் இருக்கிறது. முக்கியமாக இந்த பயணத்தில் என்னுடைய கடின உழைப்பும் இருக்கிறது, கடின உழைப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கடவுள் கொடுத்த பரிசாகவும் இதனை நான் பார்க்கிறேன். என்னுடைய சினிமா வாழ்வில் பல விஷயங்கள் நினைவு கூறும்படித்தான் இருக்கிறது. நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சில விஷயங்கள் எனக்கு தெரியாமலும் நடந்திருக்கிறது. பல்லாவரம் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ரொம்பவும் கேவலமாக இருக்கும் அதை வெளியே சொன்னால் நீங்கள் எல்லாம் பயப்படுவீர்கள். ஆனால் என் மீது ரசிகர்கள் காட்டும் அன்புதான் என்னுடைய சந்தோஷம். அவர்களை பார்க்கும்போது அவ்வளவு எனர்ஜி இருக்கிறது. இத்தனை பெரிய காதலை என்மீது வைத்திருக்கிறார்கள். இது கடவுள் கொடுத்த ஆசீர்வாதம்.
அதுபோல மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் சமந்தாவுடன் கதாநாயகனாக நடித்த ராகுல் ரவீந்தர் (பாடகி சின்மயி கணவர்) பற்றி சொல்லவே வேண்டும். நான் நோய்வாய்ப்பட்டு ஒன்றரை வருடங்களாக இருந்தேன். அந்த சமயத்தில் காலை மாலை என இரண்டு வேளையும் அவர் நேரில் வந்து என்னை சந்தித்து ஆறுதல் கூறுவார். அதனால் தான் அந்த கடினமான காலகட்டத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதை நான் நட்பு என்று மட்டும் சொல்ல மாட்டேன். எனக்கு அவர் சகோதரர். என்னுடைய சொந்த ரத்தம் மாதிரி தான். என்னுடைய குடும்பத்தில் அவர் ஒருவர் என்று சமந்தா நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.