சீதா கதாபாத்திர விவகாரம் தொடர்பாக எழுந்த விவாதத்துக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிக்க ‘ராமாயணம்’ தயாராகி வருகிறது. இதில் சீதாவாக சாய் பல்லவி நடித்து வருகிறார். முதலில் இந்தக் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீநிதி ஷெட்டியும் ஆடிஷனுக்கு சென்று வந்துள்ளார். ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியினால் தன்னை சீதாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, மீண்டும் படக்குழுவினரை அணுகவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி. இதனை முன்வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ரீநிதி ஷெட்டி, “சீதா கதாபாத்திரத்துக்கு மட்டுமே நான் ஆடிஷனுக்கு சென்றேன். அது முடிந்தவுடன் வேறு எந்தவொரு தகவலுமே எனக்கு படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை. சாய் பல்லவில் நடித்து வருவதாக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால், எனக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்க வைப்பட்டது போல் ஊடகங்கள் கட்டமைத்த விதம் முற்றிலும் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.