பத்மபூஷன் விருது பெற்று நேற்று சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நல பரிசோதனைக்காக அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் பத்மபூஷன் விருது பெறுவதற்காக டெல்லி சென்றார் அஜித்குமார். நேற்று சென்னை திரும்பிய அஜித், இன்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன மாதிரியான உடல் நலக்குறைவு என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அஜித்குமார் நாளை தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அஜித்குமார் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படார் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையா? என்பது குறித்த விவரங்களை விரைவில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.