குழந்தை பேறுவில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள்: மைனா நந்தினி!

குழந்தை பேறுவில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறார் மைனா நந்தினி.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த அவர், அப்படியே சினிமா பக்கம் சென்றார். தற்போது சினிமாவிலும், தன்னுடைய யூடியூப் சேனலில் குறும்படங்கள் இயக்கியும் இயங்கி வருகிறார். இவரது முன்னாள் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், யோகேஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு தற்போது பேட்டிக்கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பேட்டியில் குழந்தை பேறுவில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறார்.

அந்தப்பேட்டியில் மைனா நந்தினி கூறியுள்ளதாவது:-

நான் விதவை.. மலடி.. போன்ற வார்த்தைகளையெல்லாம் சந்தித்து இருக்கிறேன். எங்களுக்கு நவம்பர் 11ஆம் தேதி கல்யாணம் நடந்தது. அதே மாதம் 25-ம் தேதி எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. என்னுடைய மாமியார் இதை பார்த்து, என்னம்மா பீரியட்ஸ் வந்து விட்டது.. நீ நல்ல செய்தி சொல்வாய் என்று எதிர்பார்த்தேனே என்றார். என்னுடைய கணவரை பார்த்து, என்ன உனக்கு வலிமை இல்லையா என்று கேட்டார். இதை அவர் ஜாலியாக கேட்டாலும் எனக்கு அது கஷ்டமாகத்தான் இருந்தது.

டிசம்பர் மாதமும் இதேபோன்று நடந்து விட்டது. உடனே அவர் என்னிடம், என்னம்மா நீ என் கையில் பேரக்குழந்தை பெற்றுக் கொடுப்பாய் என்று பார்த்தால், இப்படி நடக்கிறது என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு அந்த அது குறித்தான அழுத்தம் வர ஆரம்பித்தது.

உடனே நான் கணவர் யோகியிடம் சென்று இந்த மாதிரியெல்லாம் கேட்கிறார்கள் என்று சொன்னேன். ஜனவரி மாதம் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். பின்ன நல்ல செய்தி வந்தது. இன்றும் இந்த சமூகத்தில் இப்படியான பார்வை இருக்கிறது. அது நம்மை கஷ்டப்படுத்த தான் செய்யும். அந்த வலியை மீறி நீங்கள் வெளியே வரும்பொழுது அது உங்களுக்கு மிகப்பெரிய வலிமையை கொடுக்கும். ஆகையால் அது கூட நல்லது தான்.

இந்த மாதிரியான கஷ்டமான சமயங்களில்லெல்லாம் என்னுடைய கணவரான யோகி தான் என் உடன் நின்று இருக்கிறார். என்னால் நிச்சயமாக சம்பாதித்து வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு மனரீதியாக சப்போர்ட் செய்வதற்கு ஒரு ஆள் வேண்டும்; என்னை அழகாக இருக்கிறாய் என்று சொல்ல வேண்டும்; என்னை பாராட்ட வேண்டும். அந்த விஷயங்களிலெல்லாம் யோகி மிகச் சரியாக இருக்கிறார். அந்த விதத்தில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.