சிலம்பரசனின் 49ஆவது படத்திற்கு வெற்றிகரமாக போடப்பட்ட பூஜை!

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் STR49 திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இது சிலம்பரசனின் 49ஆவது படமாகும்.

டவுன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, 49ஆவது படமாக எஸ்.டி.ஆர் என்னும் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் தொடங்கி சென்னையில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தில் சிலம்பரசன் கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறார். சிலம்பரசனின் காதலியாக நடிகை கயாடு லோகர் நடிக்கிறார். இசையினை சாய் அபயங்கர் செய்ய இருக்கிறார். குறிப்பாக, பல வருடங்களுக்குப் பின் சந்தானம், இப்படத்தில் காமெடியனாக நடிக்க இருக்கிறார்.