நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அம்மாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அவருடைய பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து இன்று மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தை ஒவ்வொரு இடத்திலும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருந்தாலும் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் ஒவ்வொரு மேடைகளிலும் பேசி இருக்கிறார். தன்னுடைய அப்பாவின் இறப்பிற்கு பிறகு அம்மா தன்னை வளர்த்த விதம் குறித்து பல இடங்களில் கண்கலங்கி இருக்கிறார். தன்னுடைய அம்மா மற்றும் அக்கா தான் தன்னுடைய உலகம். அவர்கள் இருவரும் செய்த தியாகத்தால் தான் நான் இன்று பலருக்கு தெரிய தொடங்கினேன். என்னுடைய கனவுகளை அடைவதற்கு அவர்கள் எந்த இடத்திலும் எனக்கு முட்டுக்கட்டை போடவில்லை. என்னுடைய வாழ்க்கையில் அம்மா அக்காவிற்கு அடுத்ததாக என்னுடைய மனைவியும் என்னுடைய கனவுகளுக்கு துணை நின்றார். என்னைப் பற்றி எவ்வளவோ வதந்திகளும், சர்ச்சைகளும் பரவி வந்தாலும் என் குடும்பத்தினர் அதை நம்ப மாட்டார்கள். எனக்காக முழு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களால் தான் என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடிகிறது. அவர்கள் எனக்கு கிடைத்தது பெரிய வரம் என்று சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் அம்மாவின் 70-வது பிறந்த நாளாம். சிவகார்த்திகேயன் அம்மா பிறந்தநாள் தன்னுடைய அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், “அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாய் பிறக்கின்ற வரம் வேண்டுமே.. அதை நீயே தருவாயே.. அம்மா என்று அழைக்காத உயிரில்லையே! அம்மாவை வணங்காத உயர்வில்லையே! என்று அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் நிலையில் இந்த போஸ்ட் போட்டு சில மணி நேரத்தில் மில்லியன் கணக்கான லைக்குகள் குவிந்து இருக்கிறது.