டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நகைச்சுவை பாணியில் உணர்வுப்பூர்வமான கூறியிருந்தனர். ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ. 20 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து அசத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.