நான் ஒருத்தரை தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னா அவங்க நல்லவங்களா இருந்தா போதும்: சிம்பு!

ஜீன்ஸ்ல சுத்துறவங்க கெட்ட பொன்னு இல்ல.. சுடிதார்ல இருக்குறவங்க நல்ல பொன்னும் இல்ல. நான் ஒருத்தரை தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னா அவங்க நல்லவங்களா இருந்தா போதும் என சிம்பு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக உள்ள நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா உள்ளிட்டோருடன் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளநிலையில், சிம்பு அடுத்தடுத்து இன்னும் பெயரிடப்படாத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரியில் தனது ரசிகர்களான மாணவர்களை பார்த்த சிம்பு அவர்களுடன் பேசி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து, அவர்களிடம் தான் அடுத்ததாக நடிக்கும் சிம்பு 49 படத்தில் காலேஜ் பையனாக தான் நடிக்கப் போறேன். நான் பாக்க காலேஜ் பையன் மாதிரி இருக்கேனா எனக் கேள்வி கேட்டார். அதற்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்க 100 சதவீதம் காலேஜ் பையன் மாதிரி தான் இருக்கீங்க என சொல்ல, கீழே இருந்த மாணவர்கள் கத்தி ஆராவாரம் செய்து சிம்புவை மகிழ்வித்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய சிம்பு, இல்ல டைரக்டர் என்கிட்ட நீங்க காலேஜ் பையனா நடிக்கனும்ன்னு சொன்ன உடனே எனக்கே என் மேல சந்தேகம் வந்துடுச்சு. அதுனால தான் கேக்குறேன் நான் பாக்க காலேஜ் பையன் மாதிரி இருக்கேனா ? என்றார். அதற்காக காலேஜ் மாணவர்களோடு சேர்ந்து ரிகர்சலும் செய்தார்.

பின் சிம்புவிடம் உங்களுடைய ஃபேவரைட் டயலாக் என்ன என்று மாணவர்கள் கேட்டனர். அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் தன் படத்தின் வசனம் ஒன்றை பேசிக்காட்டினார். ” இந்த டயலாக்க நான் எப்போவும் நியாபகம் வச்சிட்டே இருப்பேன். ‘ஃபர்ஸ்ட் யாரு முன்னாடி போறாங்குறது முக்கியம் இல்ல. லாஸ்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வர்றாங்குறது தான் முக்கியம்.’ என வசனத்தை பேசி முடித்ததும் விசில் சத்தம் பறந்தது.

பின் அவரிடம் கிராமத்து பெண், நகரத்து பெண் என 2 பேரில் ஒருவரை காதலித்து புரொபோஸ் செய்தால் யாரை ஏற்றுக்கொள்வீர்கள் என கேட்கப்பட்டது. அப்போது, ஒரு நிமிடம் அப்படியே அமைதியாக நின்ற சிம்பு, பசங்க எல்லாம் வேணாம் வேணாம்ன்னு சொல்றாங்க என்றதும் சிரிப்பு சத்தம் நிற்கவில்லை. பின், ஜீன்ஸ்ல சுத்துறவங்க கெட்ட பொன்னு இல்ல.. சுடிதார்ல இருக்குறவங்க நல்ல பொன்னும் இல்ல. நான் ஒருத்தரை தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னா அவங்க நல்லவங்களா இருந்தா போதும் என தக் லைஃப் பதில் கொடுத்தார். இதைக் கேட்டு அரங்கமே கரகோஷம் எழுப்பியது.

பின் தொடர்ந்து பேசுகையில், காலேஜ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போகனும்ன்னு சொன்னா, நான் அந்த டைம்ல லவ் பண்ணிட்டு இருந்தா விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு கூட்டிட்டு போவேன். லவ் ஃபெயிலியர்ல இருந்தா மன்மதன் படத்துக்கு போவேன், எதுவும் இல்ல, வாழ்க்கையில அடுத்தது என்னென்னு யோசிச்சிட்டு இருந்தா மாநாடு படத்துக்கு போவேன் என பதில் கொடுத்தார்.

மேலும் மாணவர்களுக்கு பிட்னஸ் அட்வைஸ் சொல்லுமாறு தொகுப்பாளர் கூறிய போது, இந்த வயசுல எதுவேணாலும் அவங்க சாப்பிடலாம். எதுவும் பிரச்சனை இல்ல. பிட்னஸ்க்கு எல்லாம் டைம் இருக்கு. அதுக்காக இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க. இதுனால பின்னாடி கஷ்டப்படக்கூடாது. உங்களுக்கு ஒரே ஒரு டிப் சொல்றேன். நைட் அதிகமா சாப்பிட்டுட்டு அப்படியே தூங்கிடாதீங்க. அத மட்டும் அவாய்ட் பண்ணிட்டு கொஞ்சம் பசியில தூங்குனிங்கன்னா எல்லாமே கரெக்டா இருக்கும் என்றார்.