‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் படம் ‘பென்ஸ்’. இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் ராகவா லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘பென்ஸ்’ படத்தை தயாரிக்கின்றன. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் இணைகிறது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் லாரன்ஸ் உடன் நிவின் பாலி மற்றும் மாதவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் கதைக்கு, திரைக்கதை – வசனம் எழுதி இயக்குகிறார் பாக்கியராஜ் கண்ணன். ஒளிப்பதிவாளராக கெளதம் ஜார்ஜ், இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ், சண்டை பயிற்சியாளராக அனல் அரசு ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.