லியோ ஜான் பால் இயக்கியுள்ள விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவர் தற்போது ‘அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்’ உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மார்கன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற 27ம் தேதி ‘மார்கன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.