இசையமைப்பாளராக பிரபலமடைந்த ஏஆர் ரகுமான் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த பேட்டியில் தொகுப்பாளினியான டிடி தான் கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது டிடி கேட்ட கேள்வியை கேட்டு கடுப்பான ஏ.ஆர் ரகுமான் என்னை அப்படி கூப்பிடாதீங்க நான் கசாப்பு கடையா வச்சிருக்கேன் என்று கோபப்பட்டு திட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ரோஜா படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். சின்ன வயதிலிருந்து இசையமைக்க வேண்டும் என்று கனவோடு இருந்த ஏஆர் ரகுமான் இளையராஜாவிடம் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் வேலை செய்திருக்கிறார். இளையராஜா மட்டுமல்லாமல் பல முன்னணி இசையமைப்பாளர்களிடமும் கீபோர்டு வாசிக்கும் வேலை செய்து இருக்கிறார். இவருடைய அப்பா மறைவிற்குப் பிறகு குடும்பத்தை கவனிக்கும் மொத்த பொறுப்பும் ஏ ஆர் ரகுமானுக்கு வந்தது. அப்பா சொல்லிக் கொடுத்த இசையை வைத்து தன்னுடைய திறமையை காட்ட தொடங்கிய ஏ ஆர் ரகுமானுக்கு விளம்பரப்படங்கள் வாய்ப்பு தான் ஆரம்பத்தில் வந்தது. விளம்பர படங்களில் இருந்து இசையமைக்க தொடங்கிய ஏஆர் ரகுமான் மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய வெற்றியை நிலை நிறுத்திக் கொண்டார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்ப வரைக்கும் எவர்கிரீன் பாடல்களாக பலருடைய மனதை ஆக்கிரமித்து இருக்கிறது. ரோஜா திரைப்படத்தில் காதல், மோகம், சோகம் என எல்லாம் கலந்த கலவையாக உருவான பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் வகையிலே இருந்தது.
அதுபோல ஏஆர் ரகுமான் முதல் படத்தில் தேசிய விருதையும் பெற்றுவிட்டார். அதற்கு பிறகு குத்தாட்டம் போடணுமா ஏ ஆர் ரகுமான் பாடலை போடுங்க என்று சொல்லும் அளவிற்கு இவருடைய பாடல்கள் இடம் பிடித்து விட்டது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ஏ.ஆர் ரகுமான் கலக்கி கொண்டிருக்கிறார். இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
அதே நேரத்தில் சமீப காலமாக ஏ ஆர் ரகுமான் பற்றிய செய்திகளும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஏஆர் ரகுமான் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். பொதுவாக இஸ்லாமியர்களை பாய் என்று சிலர் அழைப்பார்கள். அதுபோல ஏ ஆர் ரகுமான் பற்றிய செய்திகள் வரும்போது எல்லாம் அவரை பெரிய பாய் என்று பலர் குறிப்பிடுவார்கள்.
இது பற்றி டிடி, ஏஆர் ரகுமானிடம் கேள்வி கேட்கும் போது “பெரிய பாய்” என்று கூப்பிட்டு இருந்தார். அதற்கு சிரித்த ரகுமான் என்னது பெரிய பாயா ? என்று கேட்க, ஆமா சார் உங்களுக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா? என்று டிடி கேட்டதும், வேணாம் எனக்கு இது பிடிக்கல, சின்ன பாய், பெரிய பாய் என்று நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன்? மூஞ்ச பாரு என்று சிரித்தபடி சொல்லி இருக்கிறார். தல என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று அஜித் சொன்னது போல இப்போது நான் ஏஆர் ரகுமானும் தன்னை பாய் என்று அழைக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.