கார் ரேஸ் வீரர் அயர்டன் சென்னாவிற்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்கிவரும் அஜித்குமார் கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கார் ரேசில் அஜித்தின் ரோல் மாடலும் மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னாவிற்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்குமார் தன்னுடைய ஆசை கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் தனக்கு கார் ஓட்டுவது தான் ரொம்ப பிடிக்கும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக என்னுடைய அப்பாவிடம் கேட்டபோது, அவர் என்னால் என்னுடைய கனவுகளுக்கு உதவ முடியாது. ஆனால், நீயே அதை நிறைவேற்றிக் கொள்ளும் போது நான் தடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதனாலேயே சினிமாவில் மாடலாக அறிமுகமாகிய பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்து கதாநாயகனாகவும் புகழின் உச்சத்தில் அமர்ந்து விட்டார். சினிமாவில் பலருடைய மனதை கொள்ளை கொண்ட அஜித்குமார் தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வதிலும் கவனமாக இருக்கிறார்.

54 வயதான அஜித்குமார் இப்போதும் கார் ரேஸில் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இமாலோ சர்க்யூட்டில் டம்பெரெல்லௌ கார்னரில் மே ஒன்று அன்று நடைபெற்ற கார் பந்தய போட்டியில் உயிரிழந்த கார் ரேஸ் வீரரும் மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் வென்ற பிரேசில் நாட்டு வீரருமான அயர்டன் சென்னாவிற்கு அஜித் குமார் அஞ்சலி செலுத்தினார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துபாயில் நடந்த கார் பந்தயம் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்த அசத்தியது. அதைத்தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் ரேசில் அஜித்குமார் பங்கேற்ற கார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து பெல்ஜியம் ஸ்பா பிரான்ஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு புதியதாக எந்த படத்தில் அஜித் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது பற்றி எந்த அப்டேட்டும் அஜித் தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நான் ஓய்வு பெறப்போவது இல்லை என்றும் அஜித் கூறியிருந்தார்.