தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிளான ‘சுகர் பேபி’ வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய படமாக வரும் ஜூன் 5ம் தேதி தக் லைஃப் படம் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்துக்குப் பிறகு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதே பெரிய ஹைப்பாக உள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், சான்யா மல்கோத்ரா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், பான் இந்தியா அளவில் படத்தை தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று கமல்ஹாசன் தனது படக்குழுவுடன் புரமோஷன் செய்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா இதுவரை இப்படி நடித்துப் பார்க்கவில்லையே என ரசிகர்கள் வாயை பிளக்கும் அளவுக்கு சுகர் பேபி பாடலில் இடுப்பை எல்லாம் காட்டி ஏகத்துக்கும் ஆட்டம் போட்டுள்ளார் த்ரிஷா. படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து என்ன மேடம் நடக்குதுன்னு பரத்வாஜ் ரங்கன் வெளிப்படையாகவே கேட்க, நீங்க எல்லாம் ஷாக் ஆவீங்கனு தெரியும். ஆனால், இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது என்று அணை போட்டுக் கொண்டார். நேற்று வெளியான சுகர் பேபி பாடல் 2.6 மில்லியன் வியூஸை அள்ளி டிரெண்டாகி வருகிறது. “என்ன வேணும் உனக்கு” என த்ரிஷா பாடுவதை வடிவேலு ஸ்டைலில், ஒரு 10 ஆயிரம் பணம் இருந்தா கொடும்மா மாசக் கடைசி என மீம் போடும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் உடன் இணைந்து த்ரிஷா நடிக்க வேண்டிய முதல் படமே மர்மயோகி தான். ஆனால், அந்த படம் எடுக்கப்படாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதன் பின்னர் இருவரும் இணைந்து மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். தற்போது தக் லைஃப் படத்திலும் கமல்ஹாசனுக்கு த்ரிஷா தான் இன்னொரு ஜோடி என்பது தெளிவாகி உள்ளது. இந்நிலையில், அந்த படம் குறித்து பரத்வாஜ் ரங்கன் கேள்வி எழுப்ப, அந்த முதல் சந்திப்பை எப்போதும் மறக்க மாட்டேன். எப்படியாவது மர்மயோகி பண்ணிடுங்க சார் என கமல் சாரை எப்போ பார்த்தாலும் கேட்பேன். அந்த கதை அப்படி இருக்கும் என்றார்.
அந்த படத்துக்காக சம்மர் கேம்ப் போனது போல கமல் சார் ஆபிஸ், குதிரை பயிற்சி என ஏகப்பட்ட ரிஹர்சல் பண்ணினோம் என த்ரிஷா சொல்ல, நீங்க என்னோட ஜிம்முக்கும் வந்திருந்தீங்க என்கிற விஷயத்தையும் கமல் ஓபன் பண்ணி விட்டார். கமல் சாருடன் ஜிம்மில் வொர்க் பண்ணிக் கொண்டும், படத்துக்காக ரிஹர்சல் பண்ணது எல்லாமே அப்படியே க்ரிஸ்டல் க்ளியராக நினைவில் இருக்கிறது. அந்த படத்தை ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.