நடிகை கயாடு லோஹர் தான் தற்போதைய தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகையாக உள்ளார். தமிழில் இவரது நடிப்பில் டிராகன் படம் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இம்மார்டல் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இம்மார்டல் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார்.
கயாடு லோஹர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழில் இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம்தான் தமிழில் இவர் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் டிராகன் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றும் அவருக்கான காட்சிகள் அனைத்துமே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது, இதனால் எளிதாக ரசிகர்களின் மனதை கயாடு வென்று விட்டார். ஆனால் டிராகன் படம் வெளியாவதற்கு முன்னரே கயாடு லோஹர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கும் படமான இதயம் முரளி படத்தில் கமிட் ஆனார். அதேபோல் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் சிம்புவின் 49 வது படத்திலும் கயாடு லோஹர் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது மட்டும் இல்லாமல், இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் படமான, இம்மார்ட்டல் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. அந்த போஸ்டரில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் பாத் டப்பில் குளித்துக் கொண்டு இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரைப் பார்த்ததுமே இணையவாசிகள் பலரும் பேச்சுலர் படத்தின் இரண்டாவது பாகமா என்று கேள்வி எழுப்பினார்கள். இது மட்டும் இல்லாமல், கயாடு லோஹர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறாரே என்ற பேச்சும் அடிபட்டது.
இந்நிலையில் இம்மார்ட்டல் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.