தமிழ் சினிமாவின் முன்னணி திரைபிரபலமான ஆதி-நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
யாகாவராயினும் நாகாக்க, மரக நாணயம் உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்து கொண்ட நிலையில், இன்று மே 19ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் மண மக்களை வாழ்த்தி வருகின்றனர். திருமண விழாவில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இருவரும் திட்டமிட்டு இருப்பதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.