நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபரால் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் ஒரு சோகம் நடந்துள்ளது. அதாவது விஜய்யின் அலுவலகத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு விஜய்யின் அலுவலகத்திலேயே இறந்து கிடந்துள்ளார்.

பெயிண்ட் அடிக்க வந்த நபர் மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு செல்லாமல் விஜய்யின் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் காலையில் வேலைக்கு வந்த நபர்கள் அவர் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.