கொரோனா தொற்றால் நடிகை வேதிகா பாதிக்கப்பட்டுள்ளார்.
முனி, காளை, காஞ்சனா 3, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தற்போது, ‘கஜானா’ படத்தில் நடிக்க உள்ளார். தற்போது, கொரோனா தொற்றால் வேதிகா பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, வேதிகா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
முதன்முறையாக கொரோனா தொற்றால் பாதித்துள்ளேன். எனக்கு அதிக காய்ச்சல் இரண்டு நாட்களாக உள்ளது. லேசான அறிகுறிகளை, குறைத்து மதிப்பிடாதீர்கள். பயங்கரமான உடல் வலி மற்றும் அதிக காய்ச்சலுடன் நோய்வாய்பட்டிருப்பது லேசானது அல்ல. ஏற்கனவே பாதித்திருந்தால் மீண்டும் தொற்று ஏற்படாது என, நம்ப வேண்டாம். தயவு செய்து, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். வருந்துவதை விட, பாதுகாப்பாக இருப்பது நல்லது. உங்களுக்காகவும் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்காகவும், நீங்கள் ஒருவரையோ அல்லது 100 பேரையோ சந்தியுங்கள்; ஆனால், முகக்கவசத்தை அணியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.