பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.